பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் மாணவர்கள் - தலைமை ஆசிரியை சொந்த செலவில் ஏற்பாடு

விருத்தாசலம் அருகே ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை தமது சொந்த செலவில் மாணவர்களை ஆட்டோவில் பள்ளி அழைத்து செல்கிறார்.

Update: 2018-07-31 01:53 GMT
விருத்தாசலத்தை அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு 25 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.  அவர்களில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி தனது சொந்த செலவில் ஆட்டோவில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து மீண்டும் வீட்டில் கொண்டு விட ஏற்பாடு செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்