பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவு : பல மாதங்களாக காத்திருக்கும் 10 சதவீத பணி

காஞ்சிபுரம் மாவட்டதில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள 10 சதவீத பணிகள் மட்டும் மீதமுள்ளது.

Update: 2018-07-29 07:51 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த குடிநீர் விநியோக திட்டம், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என 121 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள 10 சதவீத பணிகள் மட்டும் மீதமுள்ளது. இது, ஆறு வழிச்சாலையை குறுக்கிடுவதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிக்காக பல மாதங்களாக காத்திருப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்