பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் "விங்ஸ்" செயலி அறிமுகம்
பதிவு: ஜூலை 28, 2018, 08:39 AM
சிம் காட்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ளும் விங்ஸ் எனப்படும் புதிய செயலியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் கோவையில் அறிமுகப்படுத்தியது. விங்ஸ் செயலியை செல்போன் மற்றும் லேப்டாப்களில் நிறுவி, அனைத்து செல்போன் மற்றும் லேன்ட் லைன் எண்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஆயிரத்து 99 ரூபாய் செலுத்த வேண்டும்.