முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைப்பு
பதிவு: ஜூலை 26, 2018, 04:25 PM
ராமேஸ்வரத்தில் முன்விரோதம் காரணமாக முனியாண்டி என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதில் முனியாண்டியின் வீடும், அவரது டீக்கடையும் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த பகுதியில் உள்ள மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.