கூடுதல் கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-07-25 14:53 GMT
தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தாங்கள் நிர்ணயம் செய்த கட்டணம் தொடர்பான தகவலை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் எனவும், 

அதையும் தாண்டி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் புகார் அளிக்கலாம் எனவும், 

இது தொடர்பான புகார்களை கட்டண நிர்ணய குழு தலைவரான நீதிபதி மாசிலாமணியிடம் புகார் அளிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி விசாரணையின் அடிப்படையில் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்ணயித்த கட்டணத்தை விட நன்கொடை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்