நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

நந்தீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த 21 வீடுகளை அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு அகற்றினர்.

Update: 2018-07-12 13:47 GMT
நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. குளக்கரையை பல வருடங்களாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். பலமுறை வீடுகளை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பிலும், பேரூராட்சி சார்பிலும் தெரிவிக்கப்பட்டும் அங்கிருந்தவர்கள் வெளியே செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவுபடி இன்று கோவில் குளத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த 21 வீடுகளை அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்