சேலம் : அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைவு

மொத்தம் 99 மாணவர்கள் இருந்த பள்ளியில் இப்போது 19 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

Update: 2018-07-12 09:15 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குபட்டி ஊராட்சி அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. பள்ளி தொடங்கப்பட்டபோது, மொத்தம் 99 மாணவர்கள் இருந்த பள்ளியில் இப்போது 19 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையை சரி செய்யவும், குடிநீர் வசதி போன்ற வசதிகளை அமைத்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்