மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் - 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் சேவைக்கு பாராட்டு

சாலைகளில் சுற்றித்திரிவோரை மீட்டு சிகிச்சை

Update: 2018-07-09 05:03 GMT
மனநலம் பாதித்த மக்களை சாலையோரங்களிலும், திருவிழாக்களிலும் விட்டு செல்லும் அவல நிலை தொடர்நது கொண்டே வருகிறது. இப்படி ஆதரவில்லாமல் தவிக்கும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு ,அவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறது பான்யன் அமைப்பு. கடந்த 25 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் நிறுவனர் வந்தனா கோபிகுமார். இதுவரை மனநலம் பாதித்த சுமார்  பத்தாயிரம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ள இந்த அமைப்பு ,ஆதரவற்ற நிலையில வீதியில் கிடக்கும் மன நோயாளிகளுக்கு கேர் சென்டர்கள் மூலம் ஆதரவும் புனர்வாழ்வும் தருகிறது.

மனநலம் பாதித்தவர்களுக்கு வெறும் மருந்துகள் மட்டுமல்லாமல் அவர்கள் குணமாகி மீண்டும் சமூகத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான மனவளப்பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன. சிகிச்சை முடிந்து மீண்டவுடன் அவர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, அரசு சலுகைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பெற்றுத்தருவது போன்றவைற்றையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. ஒருவேளை குடும்பத்தினர் இவர்களை ஒதுக்கி விட்டால் இவர்களை இலவசமாகவே வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் பல கேர் சென்டர்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெறுவோர் மற்றும் குணமானவர்களுக்காக, அவர்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை அளிக்கும் கைத்தறிக் கூடம், ஜூட் பைகள் தைக்கும் தையல்பயிற்சிக் கூடம், ஃபைல்கள் தயாரிக்கும் கூடம், நார்ப்பொருள்கள் தயாரிக்கும் இடம், பியூட்டி பார்லர், அவர்களே நடத்தும் கஃபே, சமையல் கூடம், பெட்டிக்கடை என அனைத்தும் கேர் சென்டர்களில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

The Banyan நிறுவனத்தை தொடர்புகொள்ள : 096771 21099

Tags:    

மேலும் செய்திகள்