மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட நீதிபதி
சத்துணவு தரமாக இல்லை என மாவட்ட முதன்மை நீதிபதி குற்றச்சாட்டு;
* திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் என்ற இடத்தில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப்பள்ளியில், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, மதிய உணவு சாப்பிட்டார்.
* சத்துணவு தரமாக இல்லை என குற்றஞ்சாட்டிய நீதிபதி, தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். திடீர் ஆய்வு நடத்தி, அதிரடி காட்டிய நீதிபதியை கண்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், மாணவர்கள், மகிழ்ச்சி தெரிவித்தனர்.