3 அரசு பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகம் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது;

Update: 2018-07-06 10:24 GMT
3 அரசு பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகம் திறப்பு 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாதூர், அரகண்டநல்லூர் உள்பட 3 இடங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளன. சித்தாதூரில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள நூலகங்களில் குறிப்பிட்ட அலமாரிகளை ஒதுக்கீடாக பெற்று அங்கு காவல்துறை சார்ந்த புத்தகங்களை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறையின் புதிய முயற்சியை, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்