உலகமே எதிர்பார்த்த உலகக்கோப்பை போட்டி..ஒரே இடத்தில் ஒன்று கூடிய கேப்டன்கள்..எதற்காக தெரியுமா?
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அகமதாபாத்தில் 10 அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில், உலகக்கோப்பையுடன் கேப்டன்களின் போட்டோஷூட் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், உலகக்கோப்பை தொடரை நடத்தும் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கோப்பையை ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து வானத்தை நோக்கி கைகளை உயர்த்தியபடி 10 அணிகளின் கேப்டன்களும் போஸ் கொடுத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.