விளையாட்டில் வரலாற்றை மாற்றிய பெண் - திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு | Football worldcup

Update: 2023-07-31 07:20 GMT

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் முதல் முறையாக, மொராக்கோ வீராங்கனை பென்சினா ஹிஜாப் அணிந்து களமிறங்கினார். ஹிஜாப் அணிந்து விளையாட 2014ஆம் ஆண்டில் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில், மொராக்கோவின் நவ்ஹைலா பென்சினா ஹிஜாப் அணிந்து விளையாடினார். இந்தப் போட்டியில் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் கோலை அடித்த மொராக்கோ அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்