"அரசின் முயற்சிகளால் தமிழகத்தில் செஸ் பிரபலமாகி உள்ளது" - குகேஷ், செஸ் வீரர் | MK Stalin | Chess Player Gukesh

Update: 2023-09-12 10:18 GMT

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலகத்துக்கு தனது பெற்றோருடன் வந்த குகேஷ், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்துரையாடினார். அப்போது குகேஷைப் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குகேஷ், அரசின் முயற்சிகளால் தமிழகத்தில் செஸ் பிரபலமடைந்துள்ளதாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்