அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.;

Update: 2021-12-04 10:38 GMT
ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜெர்மனி வீரர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஆட்ட நேர முடிவில், 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி முன்னேறியது. இதனால், நடப்பு சாம்பியனான இந்தியாவின் பட்டத்தை தக்க வைக்கும் கனவு தகர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்