இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;
வெலிங்டனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களும், நியூசிலாந்து அணி 348 ரன்களும் எடுத்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ரஹானே 29 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்க, விஹாரி 15 ரன்களில் வெளியேறினார். இதனால் 2வது இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் 4வது நாளிலேயே இந்திய அணி தோல்வியை தழுவியது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.