ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : மும்பை அணி 4வது இடத்திற்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , மும்பை அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.;
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , மும்பை அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் கவுகாத்தி - மும்பை அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 44வது நிமிடத்தில் கோல் அடித்தது. இரண்டாம் பாதியில் கடுமையாக போராடிய கவுகாத்தி அணியால் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. இதன் மூலம் மும்பை அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.