ஹோப்மேன் கப் - முதல் முறையாக மோதிய பெடரர் , செரீனா
ஹோப்மேன் கப் டென்னிஸ் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக பெடரர் மற்றும் செரீனா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் மோதிக்கொண்டனர்.;
1973 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டி இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, பெடரர் அமெரிக்க வீரர் டியாஃபோவையும், செரீனா, கிரீஸ் வீராங்கணை மரீயா சக்காரியை வீழ்த்தினர். அதன் பின் பெடரர் , பிளிண்டா பென்சிக் ஜோடி, செரீனா டியாஃபோ ஜோடியுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பெடரர் மற்றும் பிளிண்டா ஜோடி, 4-2 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெடரர் ரசிகர்களும், செரீனா ரசிகர்களும் போட்டி போட்டு உற்சாகப்படுத்தியதால், போட்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆடுகளம் கரவொலியால் அதிர்ந்தது. இறுதியில், செரீனாவும், பெடரரும் செல்பி எடுத்துகொண்டு புன்னகையுடன் விடை பெற்றனர்.