பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : ஆஸி. அணி 145 ரன்களுக்கு சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு சுருண்டது.

Update: 2018-10-17 14:11 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு சுருண்டது. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 39 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்