5வது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி : சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா சென்னை?

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று தொடங்கும் நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2018-09-29 04:49 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 5வது சீசன் சனிக்கிழமை தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் பாதியின் அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.   

தினசரி இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடப்பு சாம்பியனான சென்னை, கொல்கத்தா, பெங்களுரு, கோவா, டெல்லி உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வெல்லும் என்று பயிற்சியாளர் JOHN GREGORY தெரிவித்துள்ளார். சென்னை அணியில் இந்த சீசனில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் இடம்பெற்றிருந்த HENRIQUE SERENO,BIKIRAMIJIT SINGH,RENE MIHELIC ஆகிய வீரர்கள் இம்முறை சென்னை அணியில் இல்லை.

அதற்கு பதிலாக பிரேசில் வீரர் ELI SABIA. ஸ்பெயின் வீரர் ANDREA ORLANDI .பாலஸ்தீன வீரர் CARLOS SALOM ஆகியோர் புதியதாக சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், திறமையான வீரர்கள் சென்னை அணியில் இருப்பதாக பயிற்சியாளர் JOHN GREGORY கூறியுள்ளார்.  தமிழக வீரர் பாண்டியனும் சென்னை அணிக்காக விளையாடுகிறார். 

இந்த சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் JEJE  பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீசன் தொடங்குவதற்கு முன் மலேசியாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் இது ஐ.எஸ்.எல். தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். சென்னை அணி வரும்  ஞாயிற்றுகிழமை முதல் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்