இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்
பதிவு: ஆகஸ்ட் 16, 2018, 03:24 PM
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அங்கு 72வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இருவரும் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். இதில், வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.