பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : 11 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்..
பதிவு: ஜூன் 11, 2018, 06:41 AM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 11வது முறையாக நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் வென்றுள்ளார். பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்முடன், நடால் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6க்கு4, 6க்கு3, 6க்கு2 என்ற நேர் செட்களில் நடால் வெற்றி பெற்றார்.