பிரெஞ்ச் ஓபன் - இறுதி சுற்றுக்கு நடால் தகுதி
பதிவு: ஜூன் 09, 2018, 08:51 AM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு 11வது முறையாக நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.  பாரிஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நடால், அர்ஜெண்டினாவின் டெல் போட்ரோவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நடால், 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்மை நடால் எதிர் கொள்கிறார்.  

இறுதிச் சுற்றுக்கு டோமினிக் தீம் தகுதி
 
முன்னதாக, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் செக்சினாடோவை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு டோமினிக் தீம் முன்னேறினார்.