Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-09-22 00:47 GMT
  1. பரந்தூரில் நிலங்களை விற்க வேண்டுமானால் தடையில்லா சான்று பெற வேண்டும்.. புதிய விமான நிலையம் அமைவதால் பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவு..


பத்திரப்பதிவு போன்று எந்த அறிவிப்பை அரசு வெளியிட்டாலும் அஞ்ச மாட்டோம்... கடைசி வரை போராடுவோம் என, புதிய விமான நிலையம் அமையும் பகுதியில் உள்ள 13 கிராம மக்கள் ஆவேசம்....


நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்ட செயலாளர்கள் சிலரை மாற்ற திமுக திட்டம்... கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை...


2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது, ஈபிஎஸ் தரப்பு.. தாங்கள் தான் அதிமுக என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஓபிஎஸ் அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்...


செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ ராஜா... 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு...


தமி​ழகத்தில் சாதிய பாகுபாடு அதிகம் உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.... பாஞ்சாங்குளம் தீண்டாமை சம்பவம் திராவிட இயக்கத்தின் தோல்வி என்றும் விமர்சனம்... 


கடலூரில், 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தியதாக புகார்... சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான, சிறுமியின் தந்தை கைது... மாப்பிள்ளை வீட்டார் தலைமறைவு...

Tags:    

மேலும் செய்திகள்