Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-03-19 00:54 GMT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு....

இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்....


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு....

ஈபிஎஸ் அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு தாக்கல்... இன்று பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம்.... 


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என தேர்தல் ஆணையம் அ​னுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக வைத்திலிங்கம் பேச்சு...

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவே முடியாது என்றும் ஆவேசம்....


அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் தாக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு....

உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு....


ஜவுளி பூங்கா அமைக்க விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி....

மத்திய அரசின் ஜவுளி பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்....

சென்னையில் பெப்பர் ஸ்பிரே அடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் 50 லட்சம் ரூபாய் கொள்ளை.....

உடன் பணியாற்றிய நபரே ஆட்களை ஏவி கொள்ளையடித்தது அம்பலம்... 


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...


சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற பத்து தல இசை வெளியீட்டு விழா.....

என் ரசிகர்களை தலைகுனியவிட மாட்டேன் என நடிகர் சிம்பு நெகிழ்ச்சி....

Tags:    

மேலும் செய்திகள்