அரசியல் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்யராஜ் மகள்

மகளுக்கு ஆதரவாக பிரசார களம் காண திட்டமிட்டுள்ளார், நடிகர் சத்யராஜ்... தேர்தல் களத்தில் ரஜினி, கமலுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளாரா? என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

Update: 2020-12-18 12:49 GMT
நிழல் வாழ்வான சினிமாவில் வில்லன், குண சித்திர நடிகர், ஹீரோ ஆகிய அடையாளங்கள் நடிகர் சத்யராஜுக்கு உண்டு. 

ஆனால் நிஜத்தில் சத்யராஜை உற்று பார்த்தவர்களுக்கு தெரியும் அவர், ஒரு சாதி - மத மறுப்பாளர், கடவுள் மறுப்பாளர், பெரியாரிய சிந்தனையாளர். பல்வேறு கூட்டங்களில் அனல் பறக்க பேசியிருக்கிறார். 

இந்த அரசியல் தெறிக்கும் பேச்சு வரும் சட்டமன்றத்தேர்தல் பிரசார களத்தில் ஓங்கில் ஒலிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 

என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என்றும், நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் சத்யராஜ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்..
Tags:    

மேலும் செய்திகள்