புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார், முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.;
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துணைநிலை ஆளுனர் கிரண்பேடி வராத நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியது. சிறிது நேரத்தில் அவையை ஒத்தி வைத்த சபாநாயகர், 12 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் அவை கூடிய போது, நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். மேலும் கருணாநிதி பெயரில், காலை சிற்றுண்டி திட்டத் தொடங்கப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.