பிளாஸ்மா தானம்.... உயிரிழப்பை தடுக்க முன்வாருங்கள்...தெலங்கானா ஆளுநர் தமிழிசை அழைப்பு
ஐதராபாத் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள புளாஸ்மா தெரபி சிகிச்சை மையத்தை , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ஐதராபாத் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள புளாஸ்மா தெரபி சிகிச்சை மையத்தை , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், பிளாஸ்மா தரத் தகுதியான அனைவரும் முன்வந்து தானம் வழங்க வேண்டும் என்றும், அப்போது தான், பிளாஸ்மா தட்டுப்பாட்டால், தெலங்கானாவில் யாரும் கொரோானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படாது என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.