"நாட்டில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை" - ராகுல்காந்தி​ உடனான ஆலோசனையில் செவிலியர்கள் தகவல்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த செவிலியர்கள் உடன் ராகுல்காந்தி கலந்துரையாடி உள்ளார்.

Update: 2020-07-01 09:54 GMT
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான, ராகுல்காந்தி இன்று காலை நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு சேர்ந்த செவிலியர்கள் உடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சர்வதேச பணி அனுபவங்கள் குறித்து அப்போ செவிலியர்களிடம் கேட்டறிந்துள்ளார். இதில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் செவிலியர் நரேந்திரா பேசும் போது,  கொரோனா நோயாளிகளுக்கு, படுக்கை வசதி கொண்ட பிரத்யேக அவசர சிகிச்சை பிரிவுகளை  அதிக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் விபின், நாட்டில்12 லட்சம்  அலோபதி மருத்துவர்களும், 37 லட்சம்  செவிலியர்கள் உள்ளதாகவும்,  உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்