"மக்கள் மகிழ்ச்​சியின்றி அதிருப்தியுடன் உள்ளனர்" - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து

நாட்டில் வன்முறையும் அதிருப்தியும் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-02-15 21:48 GMT
நாட்டில் வன்முறையும் அதிருப்தியும் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  பேசிய அவர், உலகம் நெருங்கி வரும் நிலையில்,  தற்போது மூன்றாவது உலகப் போர் அச்சுறுத்தி வருவதாகவும், அதற்கான நிகழ்வுகள் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்தார். நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும், எல்​லோரும் எதி​ர்ப்பு மனநிலையில் உள்ளதா​கவும் மோகன் பகவத் தெரிவித்தார். மில் தொழிலாளர்கள், உரிமையாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என எல்லோருமே மகிழ்ச்சியற்று, அதிருப்தியுடன் காணப்படுவதாகவும் மோகன் பகவத் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்