"ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் கூறிய கருத்து" - காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கண்டனம்

ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-11-07 18:49 GMT
ஸ்டாலின்  தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 
கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே அம்மா சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவ்வாறு பேசியுள்ளதாக கூறினார்.  ஒருவரை தரம் தாழ்ந்து பேசுவதால் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தரம் தாழ்ந்து போவது கிடையாது என்றும் விமர்சனம் செய்பவர்கள் தான் தாழ்ந்து போவார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்