காமராஜ் நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற வாய்ப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.;

Update: 2019-09-29 11:42 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். அப்போது காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஜான் குமாரும் உடன் இருந்தார். இதை அடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜான் குமார், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காமராஜ் நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்