"பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" - அ.தி.மு.க. அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

பால் விற்பனை விலையை தமிழக அரசு திடீரென லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-17 21:31 GMT
பால் விற்பனை விலையை தமிழக அரசு திடீரென லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஆவின் நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்வதுடன், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்திதர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பால் விற்பனை விலை உயர்வை அ.தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்