ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

Update: 2019-06-10 05:02 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,  ராஜன் செல்லப்பா கூறியிருந்த நிலையில், இந்த கருத்துக்கு அவரது மகன் ராஜ்சத்யன், ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் என அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையை ராஜ்சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு  சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு சென்று,  ராஜ்சத்யன் சந்தித்து பேசினார். 
Tags:    

மேலும் செய்திகள்