"மாலத்தீவு பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு இருக்கும்" - பிரதமர் மோடி

மாலத்தீவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான உறவு வரலாற்று பழமையானது என்று பெருமிதம் தெரிவித்தார்.

Update: 2019-06-09 01:47 GMT
மாலத்தீவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான உறவு வரலாற்று பழமையானது என்று பெருமிதம் தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க, மாலத்தீவின் பவள மசூதியை பாதுகாப்பதில், இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதி அளித்த பிரதமர் மோடி,  பயங்கரவாதம் நாட்டிற்கு மட்டுமல்ல கலாசாரத்திற்கும் எதிரானது என்றார். பயங்கரவாத‌த்தை தடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பயங்கரவாத‌த்தை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்