பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

Update: 2019-05-24 08:03 GMT
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக தெரிவித்தார். அதன் காரணமாகவே  பாஜக பெரும் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் கூறினார். பிரதமருடன் பாஜக தலைவர் அமித் ஷாவும் உடன் சென்றார். 
Tags:    

மேலும் செய்திகள்