5ம் கட்ட தேர்தல் : 62.56% வாக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.;

Update: 2019-05-06 17:59 GMT
உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.மாலை 6 மணி நிலவரப்படி பீகாரில் 57 புள்ளி 86 சதவீதமும், காஷ்மீரின் லடாக் தொகுதியில் 63.76 சதவீதமும் அங்குள்ள அனந்தநாக் தொகுதியில் வெறும் 8 புள்ளி 76 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.இதுபோல,  மத்திய பிரதேசத்தில் 62.60 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 63 புள்ளி 75 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.உத்தர பிரதேசத்தில் 57 புள்ளி 33 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 73 புள்ளி 97 சதவீதமும், ஜார்க்கண்ட்டில் 63 புள்ளி 72 சதவீதமும்  வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்