"விஜயகாந்த் பிரசாரம் குறித்து தலைமைக்கழகம் அறிவிக்கும்" - பிரேமலதா விஜயகாந்த்
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும், ஆளும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும், ஆளும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், திருப்பாற்கடலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவரது பிரசாரம் குறித்து கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறினார்.