திறமையான பிரதமர் இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி
"அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி";
அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டங்கள் அறிவித்து நெருக்கடி அளித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஜீவானந்தத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறினார்.
கடந்த தேர்தலில் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்களே அது வழங்கப்பட்டதா என்று மக்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அப்போது நிலம் வழங்கவில்லை என்று மக்கள் பதில் குரல் எழுப்பினர். திருவாரூர் கொரடாச்சேரியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்த கேள்வியை அவர் எழுப்பினார்..