"தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை" - சீமான் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சி பிரசார கூட்டத்தில் சீமான் குற்றச்சாட்டு;
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.அப்போது பிரசாரம் செய்து பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் எந்த பயமும் இல்லாமல், தனித்து மக்களை நம்பி நிற்பதாக தெரிவித்தார்.மத்திய அமைச்சரவையில் இருந்த கட்சி திமுகவும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 37 அதிமுக எம்பிக்களும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார்.