அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலா?

சென்னைக்கு படையெடுத்த உடுமலை ராதாகிருஷ்ண‌ன் ஆதரவாளர்கள்;

Update: 2019-03-03 23:44 GMT
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌னை, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமர்த்துமாறு முதலமைச்சர் பழனிசாமியிடம் வலியுறுத்த, அவரது ஆதரவாளர்கள் 500 பேர் 10 பேருந்துகளில் சென்னைக்கு விரைந்துள்ளனர். சமீபத்தில் உடுமலை ராதாகிருஷ்ண‌னை இந்த பொறுப்பில் இருந்து விடுவித்த, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்,  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை  நியமித்தனர். அவருக்கு ஆதரவாக, கட்சி தொண்டர்கள் சிலர் வாழ்த்துக்களை பறிமாறி வரும் நிலையில், தற்போது, மற்றொரு குழுவினர் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது, திருப்பூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்