"தமிழகத்தில் ஜனவரியில் தேர்தல் நடத்துவது சரியல்ல" - தம்பிதுரை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தமது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-01-06 07:30 GMT
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தமது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகை காரணமாக தமிழகத்தில் ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது சரியல்ல என்று கூறினார். இது தமது சொந்த கருத்து என்று கூறிய தம்பிதுரை அதிமுக வேட்பாளர் வரும் 10 ந்தேதி அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்