காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

Update: 2018-11-12 16:12 GMT
உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார், அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59. அனந்தகுமாரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் 
உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.  அனந்தகுமாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நேரில் சென்று, அனந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அனந்தகுமார் மறைவுக்கு, கர்நாடகாவில், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்