"தனது பிறந்த நாளன்று செய்ய வேண்டியவை மக்களுக்கு நற்பணிகளே" - கமல்ஹாசன்

பிறந்த நாள் அன்று தன்னை வந்து சந்திப்பதை விட, அவரவர் பகுதி மக்களுக்கு நற்பணிகளை செய்ய வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-11-04 12:15 GMT
வரும் 7ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு தனது கட்சி தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறந்த நாள் அன்று தன்னை வந்து சந்திப்பதை விட, அவரவர் பகுதி மக்களுக்கு நற்பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உறுப்புதானம், ரத்த தானம், கிராமங்களிலும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களிலும் மருத்துவ முகாம்கள், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்றும் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்