"திமுக ஒரு கட்சி அல்ல - அது கம்பெனி" - எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஒரு கட்சி அல்ல - அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Update: 2018-09-26 00:45 GMT
திமுக - காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஒரு ஜனநாயக கட்சி என வர்ணித்த அவர், தந்தையின் தயவில் வளர்ந்தவர், ஸ்டாலின் என்றார். விசுவாசம் - உழைப்புக்கு மட்டுமே அதிமுகவில் பதவி கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம் என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்விரு கட்சிகளையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்