"அரசியலில் இருந்து மோடியை அகற்ற சதி" - பாக்.- காங். மீது பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற, பாகிஸ்தானும் காங்கிரஸ் கட்சியும் விரும்புவதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2018-09-24 16:48 GMT
இந்திய அரசியலில் இருந்து, பிரதமர் நரேந்திரமோடியை அகற்ற, பாகிஸ்தானும் காங்கிரஸ் கட்சியும் விரும்புவதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. புதுடெல்லியில்,செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, அண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள் என்று கூறிய சம்பித் பத்ரா,  இது ஒருபோதும் நடக்காது என்றார். ஏழை மக்கள், பிரதமர் மோடியின் பின்னால் இருப்பதாகவும் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்