"தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
பதிவு: செப்டம்பர் 09, 2018, 04:35 AM
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் அவர்கள் எல்லாம் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை  மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க. வாரிசு கட்சி தான் என குறிப்பிட்டுள்ளார்.