பா.ஜ.க. 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் : கூட்டணி குறித்து ஆலோசனை

டெல்லியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-09-08 08:03 GMT
பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டம், டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய் மறைவை அடுத்து, இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பா.ஜ.க.- வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட, 350க்கும் அதிகமான தலைவர்கள், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர ராஜனும் பங்கேற்றுள்ளதால், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்