விஜயபாஸ்கர், பதவி விலகி குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் - சீமான்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 12:11 PM
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீட் தேர்வு பிரச்சனை தீராது என்றும், திட்டமிட்டு வினாத்தாளில் பிழைகள் உண்டாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

திரைப்பட நகைச்சுவை காட்சி போன்றது விஷால் அரசியல் என்றும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் சீமான் தெரிவித்தார். 

கனிமவள முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.