"இளைஞர்கள் பலத்தால் இந்தியா வேகமாக வளருகிறது" - பிரதமர் மோடி

இளைஞர்கள் பலம் இருப்பதால் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 01:48 GMT
வங்காள விரிகுடாவை ஒட்டிய நாடுகள் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து நேபாள வீரர்களின் கண்கவர் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பிம்ஸ்டெக் தலைவர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா நேபாள அதிபர் பித்ய தேவி பண்டாரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மியான்மர், தாய்லாந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, இளைஞர்கள் பலம்  இருப்பதால் இந்தியா  வேகமாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பிலும் கவனம் செலுத்துமாறு, சக தலைவர்களை, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்