புதிய சம்பளத்தை பெற்றனர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

புதிய சம்பளத்தை 13 மாத நிலுவைத் தொகையுடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.

Update: 2018-08-28 11:47 GMT
எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது,போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் நடந்ததால், சம்பள உயர்வு வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.இதையடுத்து, பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே தி.மு.க.  எம்.எல்.ஏ.க்கள் வாங்கி வந்தனர்.  இந்நிலையில், எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சம்பளத்தை வழங்கும் படி' சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்தார். இதனையடுத்து, தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 13 மாத நிலுவைத் தொகையான 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் புதிய சம்பளம் வழங்கப்படும். இதற்கிடையே, கருணாநிதிக்கும், அவர் மரணமடைந்த நாள் வரை கணக்கிட்டு, நிலுவை சம்பளம், அவரது வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்